Published : 30 Jul 2021 16:23 pm

Updated : 30 Jul 2021 16:23 pm

 

Published : 30 Jul 2021 04:23 PM
Last Updated : 30 Jul 2021 04:23 PM

மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்:


கிரகநிலை:

ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். தொழிலில் புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.

நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். பெண்கள் சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி
பரிகாரம்: ஸ்ரீராதா கிருஷ்ணரை வழிபடுவது நல்லது. கிருஷ்ண பகவானை தினமும் வழிபட்டு வாருங்கள். பலமும் வளமும் பெறுவீர்கள்.
---------------------------------------------------------------------------

கும்பம்:

கிரகநிலை:

ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம்.

உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும்.

தொழிலில் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

பெண்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

மனதிற்க்குப் பிடித்தவர்களைச் சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். மாணவர்கள் அடுத்தவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
பரிகாரம்: முன்னோர்களை வழிபடுவது நல்லது. நவக்கிரகங்களை வலம் வருவது நல்லது.
--------------------------------------------------------------------------------

மீனம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

தொழிலில் வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

பெண்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும், மனச் சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். கேளிக்கை போன்றவற்றில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். பெரியோர் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி
பரிகாரம்: காக்கைக்கு தினமும் சாதம் வைத்தல் நல்லது. ராமர் கோயிவிலுக்கு சென்று அடிக்கடி தரிசித்து வணங்கி வரவும்.
--------------------------------------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மகரம்கும்பம்மீனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரைமீனம்பலன்கள்வார பலன்கள்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்ஜோதிட பலன்கள்MagaramKumbamMeenamPalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x