Published : 30 Jul 2021 15:40 pm

Updated : 30 Jul 2021 15:40 pm

 

Published : 30 Jul 2021 03:40 PM
Last Updated : 30 Jul 2021 03:40 PM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்:


கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும்.

பதற்றத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைபிடியுங்கள். சிற்சில விரயங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள்தான் என்பதை உணருங்கள்.
உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. கடன்களிலிருந்து விடுபடவும் உகந்த நேரமிது. தொழிலில் உங்கள் தன்னம்பிக்கை, திறமை, திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளைப் பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.

புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவமணிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு தெரியும். மிகச் சிலரே உங்களை புரிந்து கொள்வார்கள். நண்பர்களுடன் பழகும்போது கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி
பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------

சிம்மம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயனசயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.

உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். உத்தியோகஸ்தர்கள், வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது.

மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். தொழில்துறையாளர்களுக்கு வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறைகள் தங்குதடையின்றி நடைபெறும்.

பெண்கள் எதிர் விளைவுகளை முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக விடவேண்டும். கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகிட வாய்ப்பான காலமிது.

சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும்.

மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட மனம் ஏங்கும். எச்சரிக்கை தேவை. அவமானங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு .

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
பரிகாரம்: தினமும் சிவன் கோயிலுக்குச் சென்று, தீபமேற்றி வர நன்மைகள் நடக்கும்.
---------------------------------------------------------------------------------------------

கன்னி:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயனசயன போக ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்குப் பயணம் செல்ல வேண்டி வரலாம். தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும்.

சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். பெண்கள் திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். அனைவருடனும் அனுசரித்துச் செல்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நாராயணரை வழிபடுவது நல்லது. பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.
------------------------------------------------------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!கடகம்சிம்மம்கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரைகன்னிபலன்கள்வார பலன்கள்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்ஜோதிட பலன்கள்KadagamSimmamKanniPalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x