Published : 28 Jul 2021 13:14 pm

Updated : 28 Jul 2021 13:14 pm

 

Published : 28 Jul 2021 01:14 PM
Last Updated : 28 Jul 2021 01:14 PM

சிம்ம ராசிஅன்பர்களே! ஆகஸ்ட் மாத பலன்கள்; தொழிலில் வளர்ச்சி; பாக்கி வசூலாகும்; மதிப்பு கூடும்; எதிலும் லாபம்! 

august-monthly-palangal-simmam

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


கிரக நிலை:

ராசியில் செவ்வாய், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

05-08-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களைச் செய்து சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுகப் போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

மகம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

பூரம்:
இந்த மாதம் மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.தவறவிடாதீர்!

சிம்ம ராசிஅன்பர்களே! ஆகஸ்ட் மாத பலன்கள்; தொழிலில் வளர்ச்சி; பாக்கி வசூலாகும்; மதிப்பு கூடும்; எதிலும் லாபம்!சிம்மம்சிம்ம ராசிசிம்ம ராசி பலன்கள்சிம்ம ராசி - ஆகஸ்ட் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்மாத பலன்கள்ஆகஸ்ட் மாத பலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்SimmamSimma rasiSimma rasi palangalSimma rasi - august palangalMonthly palangalAugust monthly palangalAugust monthly palangal - simmam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x