Published : 26 Jul 2021 03:16 PM
Last Updated : 26 Jul 2021 03:16 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை)

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும்.

அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும். அலுவலக நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள்.

வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள். கலைத்துறையினருக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த புதிய தொழில் அல்லது வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகும். எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதால் செலவுகள் அதிகமாக ஏற்படும். வாகன பராமரிப்புச் செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

சனி-
தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். பெருமாளுக்கு மலர் மாலை சூட்டி வணங்குங்கள். நினைத்தது நிறைவேறும்.
****************

மிருகசீரிடம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். புதிதாக வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும்.

தாயாரின் உடல்நலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். அலுவலகப் பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதுவரை இருந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கும்.

வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும் நாள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன்-
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். கைப் பொருட்களை கவனமாகக் கையாள வேண்டும்.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். எந்த செயலிலும் அதிக கவனம் வேண்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சனி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும்.தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.

ஞாயிறு-
பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ சனீஸ்வர பகவானை வணங்குங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள். நன்மைகள் நடக்கும்.
**********

திருவாதிரை -

நினைத்தது நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்பட்டு பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும். உறவினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும், வீண் மன வருத்தங்கள் ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்கள் சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவார்கள்.

ஒரு சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். மிகச்சிறந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய்-
செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். தொழில் தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும்.

புதன்-
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

வியாழன்-
நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
தொழில் தொடர்பான நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x