Published : 01 Jul 2021 12:14 PM
Last Updated : 01 Jul 2021 12:14 PM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:2
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.

2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நன்மை தரும்.

ரண ருண ரோகாதிபதி புதன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். எந்த வாக்குறுதியையும் காப்பாற்ற முடியும்.

மற்றவர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். தொழில் ஸ்தானாதிபதி சனி வக்ரமடைந்தாலும் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளைக் கவனிப்பது நல்லது. குடும்பாதிபதி சுக்கிரன் நான்காம் இடத்தில் இருப்பது பலம். பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் நீங்கும். கலைத்துறையினருக்கு ஏற்றம் காணப்படும்.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
**************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.

2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியில் புதன் ராகுவால் டென்ஷன் படபடப்பு குறையும்.

நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களைச் செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். தன வாக்கு குடும்பாதிபதி புதன் ஆட்சியாக மாறுகிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிலும் நிதானம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
*****************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரக அமைப்பு உள்ளது.

2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிக்கு ராசிநாதன் புதன்பகவான் வருகை தருகிறார். வீண் மனக்கவலை நீங்கும். கனவுத் தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.

கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு செலவு கூடும். புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: வாராகி தேவியை வணங்கி வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x