Published : 17 May 2021 16:07 pm

Updated : 17 May 2021 16:07 pm

 

Published : 17 May 2021 04:07 PM
Last Updated : 17 May 2021 04:07 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -


சிறப்பான செயல்பாடுகளால் முன்னேற்றத்தைக் காணக்கூடிய வாரம்.

தாய் தந்தை உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சொந்த வீடு வாங்கும் முயற்சி அல்லது புதிய வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் பிறக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் சுமுகமான நிலை இருக்கும்.

உத்தியோகத்தில் இயல்பான நிலை தோன்றும். ஒரு சிலருக்கு வேலை தொடர்பாக அழுத்தங்கள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு உறவினர்களுடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொறுமையாக எந்தவொரு விஷயத்தையும் கையாள்வது நல்லது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். சொத்து தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன் -
அலைச்சல்களும், அதனால் உடல் அசதியும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வியாழன் -
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும். வியாபாரத்தில் கடன் தொடர்பான சங்கடங்கள் உருவாகும். அலுவலகத்தில் நெருக்கடிகள் ஏற்படும்.

சனி -
முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக சந்திக்க நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள். சிறப்பான பலன்களைத் தரும்.
*************

உத்திரட்டாதி -

பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் சாதகமாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இப்போது தீரும்.

பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் செலவுகள் உண்டு. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

புதன் -
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்.அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். சுப காரிய பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும்.

வியாழன் -
அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் ஏற்படும்.

சனி -
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
***********

ரேவதி-

நன்மைகள் பலவாறாக நடக்கும். வருமானம் இருமடங்காக ஏற்படும்.

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் சாதகமான வெற்றியைக் காணலாம். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடுகளும் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் பிரச்சனை சாதகமாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். திருமணம் இப்போது முடிவாகும், திருமணத் தேதி குறிக்கப்படும். கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

புதன் -
அலுவலகப் பணிகளை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். தொழில் தொடர்பாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தால் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

சனி -
குடும்பத்தாருடன்.மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலையில் திருப்தியான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ஞாயிறு -
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தாருடன் இணக்கமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் படியுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை)ரேவதிபலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்வார பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்PooratadhiUtthiratadhiRevathiPalangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x