Published : 17 May 2021 15:19 pm

Updated : 17 May 2021 15:19 pm

 

Published : 17 May 2021 03:19 PM
Last Updated : 17 May 2021 03:19 PM

மூலம், பூராடம், உத்திராடம்;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -


எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும் வாரம்.

பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். கடந்த சில மாதங்களாக இருந்த பராமரிப்புச் செலவுகள் குறையும்.

திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பொருளாதார சிக்கல்கள் தீரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக அரசு உதவி கிடைக்கும்.

செவ்வாய் -
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கும்.

வெள்ளி -
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்புகள் செய்யும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிக்கனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

சனி -
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

பூராடம் -

முயற்சிகளால் முன்னேற்றம் ஏற்படும் வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கிடைக்கும். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர் உங்களுக்கு பல வகையிலும் உதவி செய்வார். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார இடங்களை விரிவுபடுத்துவது போன்றவை நடக்கும். அதற்குத் தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். அது தொடர்பாக அரசு சலுகைகள், வங்கி உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நெருங்கிய நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகப் பணியில் கூடுதல் சுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். எதிர்பார்த்த வருமானம் இருக்கும்.

செவ்வாய் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சிறிய அளவிலான ஆரோக்கிய அச்சுறுத்தல் வந்து போகும்.

புதன் -
எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து செயல்படுங்கள். பணச்செலவு அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

வியாழன் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீர்வதற்கான வழி வகை கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

சனி -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களோடு இணைந்து புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை ஏற்படும். அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய வியாபார நண்பர்கள் உதவியுடன் வியாபார வளர்ச்சிக்கான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீகருடாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் கேளுங்கள். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
************

உத்திராடம் -

அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும். ஆனாலும் ஒரு சில மனக் குழப்பங்கள் ஏற்படும்.

மனதில் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் அதை சரிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவு கிடைக்கும்.

ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதி தரும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இப்போது உடனடியாக கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். அரசு வழி உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். புதிய கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும்.

செவ்வாய் -
அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியைச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் இழுபறியாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். அநாவசியச் செலவுகள் ஏற்படும். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

புதன் -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.

வியாழன் -
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையைக் கையாள வேண்டும். கையாளும் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
நீண்ட நாளாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் இன்று நிறைவேறும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

ஞாயிறு -
எதிர்பார்த்திருந்த பண உதவி இன்று கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.




தவறவிடாதீர்!

மூலம்பூராடம்உத்திராடம்;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை)உத்திராடம்பலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்வார நட்சத்திர பலன்கள்நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MoolamPooradamUtthiradamPalangalJodhidamJodhida palangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x