Published : 17 May 2021 01:29 PM
Last Updated : 17 May 2021 01:29 PM

விசாகம், அனுஷம், கேட்டை;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -

நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் தானாக தேடி வரும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உறவினர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

தொழிலில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும்.

பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சகோதரர்களிடம் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். ஒரு சிலர் தாங்கள் பணிபுரியும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
சராசரியான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும்.

செவ்வாய்-
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும்.

புதன் -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
வேலை தொடர்பான விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் விலகும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனை செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக சந்திப்புகள் ஏற்படும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
தட்சிணாணாமூர்த்தி குருபகவானை வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
*************

அனுஷம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில்ஒரு சில பிரச்சினைகள் தோன்றி மறையும். மனைவியின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களோடு இணைந்து பணியாற்றும் நிலையும் ஏற்படும்.

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு உதவிகளும் வங்கியின் கடன் உதவியும் தொழிலுக்கு கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். மிகப் பெரிய ஆதாயம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தொடர்பான விஷயங்கள் சற்று தள்ளிப் போகும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத வருமானங்கள் கிடைக்கும். எந்த வியாபாரமாக இருந்தாலும் ஆதாயம் இரட்டிப்பாக இருக்கும். தொழில் முயற்சிகளில் முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள், உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டியது வரும்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி ஏற்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள்.

சனி -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் பிரச்சினைகள் தேடிவரும். சுதாரிப்பாக இருந்து கொள்வது நல்லது.

ஞாயிறு -
நீண்ட நாளாக திட்டமிட்டிருந்த வீட்டுப் பராமரிப்பு வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பார்வதி அன்னையை வணங்குங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*************

கேட்டை -

தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளும் வாரம். பணம் பல வழிகளிலும் வரும்.

எந்த முயற்சியிலும் ஆதாயம் கிடைப்பதாகவே இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு என்பதே இல்லாத நிலை உருவாகும்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் அகலும். அலுவலகத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழிலில் இருந்த தடைகள் தாமதங்கள் அகலும். முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தள்ளி வைக்க வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வியாழன் -
அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும், நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். முக்கியமான ஒப்பந்தங்கள் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

சனி -
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார நிமித்தமாக பேச்சுவார்த்தைகள் மனநிறைவை ஏற்படுத்தி தரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x