Published : 17 May 2021 12:49 pm

Updated : 17 May 2021 12:49 pm

 

Published : 17 May 2021 12:49 PM
Last Updated : 17 May 2021 12:49 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -


நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகள் பிரச்சினைகளுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும்.

உத்தியோகத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது, இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும்.
கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

செவ்வாய் -
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

புதன் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். நீண்ட நாளாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினை இன்று தீரும்.

சனி -
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முக்கியமான உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாலஷ்மி வழிபாடு செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். நன்மைகள் பெருகும்.
********

சித்திரை -

நினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.

பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மருத்துவச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம். அலுவலகப் பணிகளில் அதிக பணிச்சுமை கூடினாலும் இயல்பாகவே இருக்கும். சக ஊழியர்களுடன் இணைந்து முக்கியமான பணிகளை முடித்துக் கொடுப்பீர்கள்.

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றத்தை காணலாம்.

பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள் -
மனதில் உற்சாகம் ஏற்படும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். உடல்நலத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும். அது தொடர்பான மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.

புதன் -
நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
செலவு அதிகம் இருக்கும். செலவுகளைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை இன்று எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.

ஞாயிறு -
குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்ப விஷயங்களை மனம்விட்டு பேசி பிரச்சினைகளுக்கு முடிவு காண்பீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கிய தகவல் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***********

சுவாதி -

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். உற்சாகமான மனநிலைக்கு மாறுவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். கவலை தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும் ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உருவாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆதாயம் தரக்கூடிய காரியங்கள் அனைத்தும் மிக எளிதாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உருவாகும். அது தொடர்பாக மருத்துவச் செலவு ஏற்படும்.

வெள்ளி -
அலுவலகப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவாகும்.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார இடங்களில் மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



தவறவிடாதீர்!

அஸ்தம்சித்திரைசுவாதி;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை)சுவாதிபலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்நட்சத்திர பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்AsthamChitthiraiSwathiPalangalJodhidamNatchatira palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x