Published : 17 May 2021 12:30 pm

Updated : 17 May 2021 12:30 pm

 

Published : 17 May 2021 12:30 PM
Last Updated : 17 May 2021 12:30 PM

மகம், பூரம், உத்திரம்;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -


திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகும். குடும்பத்தின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கவலை தந்து கொண்டிருந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களாலும் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முக்கியமான பணியை செய்து முடிப்பீர்கள். அதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

புதன் -
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும்.

வியாழன் -
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருப்பது மனதிற்கு நல்லது. கையாளும் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணப்பை, கைப்பேசி போன்றவற்றில் கவனமுடன் இருக்க வேண்டும்.

வெள்ளி -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

சனி -
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றத்தை தருவதாக இருக்கும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்களால் தொழில் தொடர்பான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நல்லது நடக்கும்.

*********************

பூரம் -

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் வாரம். குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாக இருக்கும். எனவே செலவுகளும் அதிகமாக ஏற்படும். சகோதர வழியில் ஒரு சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். வீடு மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது.

பணியிடத்தில் சக ஊழியர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். அவர்களின் உதவியோடு முக்கிய பணிகளைச் செய்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானத்தோடும், கவனமாகவும் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடும். குடும்பத் தேவைகள் அதிகரிக்கும். ஞாபக மறதி பிரச்சினை ஏற்படும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக முக்கிய நபரின் உதவி கிடைக்கும்.

புதன் -
மனநிறைவு ஏற்படக்கூடிய நாள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். அது தொடர்பான தொலைபேசி தகவல் இன்று உறுதியாகும். சுப விசேஷங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் அதிக ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை பலமாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி -
மனதை நெருடிக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு இருக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சலுகைகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். பண உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீசக்தி வடிவான அம்மன் வழிபாடு செய்யுங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
**************

உத்திரம் -

எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் எண்ணியபடியே நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும்.

ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். தந்தைவழி சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும்.
தாய்வழி உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நெருங்கிய உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். நீங்களும் உங்களால் ஆன உதவிகளை உறவினர்களுக்குச் செய்து தருவீர்கள்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் முக்கியமான பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பொறுமையாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். எந்தவிதமான செயல்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன் -
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும்.

வியாழன் -
குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் ஆதாயம் குறையும்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி -
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவாக சிந்திக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். பொறுமையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும். தூரத்து உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். நெருங்கிய நண்பர் உதவி செய்வார்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய பகவான் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



மகம்பூரம்உத்திரம்;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை)உத்திரம்பலன்கள்ஜோதிட பலன்கள்நட்சத்திர பலன்கள்வார நட்சத்திர பலன்கள்வார பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MagamPooramUtthiramJodhida palangalPalangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x