Published : 17 May 2021 11:38 AM
Last Updated : 17 May 2021 11:38 AM

புனர்பூசம்,  பூசம், ஆயில்யம்;  இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

குடும்பத்தில் இயல்பான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். குழந்தைகளின் ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அரசின் நடைமுறைகள், விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியது வரும். கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

புதன் -
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வியாழன் -
தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து கூற வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வெள்ளி -
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

சனி -
வியாபார நிமித்தமாக ஏற்படும் சந்திப்புகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தி செய்துவிடுவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

ஞாயிறு-
எதிர்பார்த்த உதவிகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவாகும். மன நிறைவு உண்டாகக் கூடிய நாள்,

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விஷ்ணு துர்கை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
************

பூசம் -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும்.

சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு மன நிறைவு உண்டாகும் வாரம். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமான முடிவு ஏற்படும்.

செவ்வாய் -
எதிர்பாராத உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் சுமுக நிலை ஏற்படும்.

புதன் -
மன நிறைவு உண்டாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

வியாழன் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். அலுவலகப் பணியில் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் நிதானம் தேவை. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி -
எந்த விஷயத்திலும் அதிக கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் செலவுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.

சனி -
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

ஞாயிறு -
நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
குரு பகவானை வழிபாடு செய்வதும், குரு கவசம் படிப்பதும், நன்மைகள் அதிகமாகும்.
***************

ஆயில்யம் -

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம் தொடர்பாக மனதில் சிறிய அளவிலான குழப்பங்களும், மன உளைச்சலும் ஏற்படும். ஆனாலும் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் வராது, அப்படியே பிரச்சினைகள் வந்தாலும் எளிதாக தீரும்.

உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும் சேதி வந்துசேரும்.
கலைஞர்களுக்கு ஒரு சில நல்ல வாய்ப்பு நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். மனதளவில் சற்று தளர்வு ஏற்படும். எடுத்துக்கொண்ட வேலைகள் முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத உதவி கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும்.

புதன் -
சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் பெருகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தேவையான உதவிகள் தொழிலுக்கு கிடைக்கும்.

வியாழன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

சனி -
உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். உறவினர்களுக்காக ஒரு சில உதவிகளைச் செய்து தரவேண்டியது வரும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்தியோகம் தொடர்பாக நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x