Published : 13 May 2021 11:02 am

Updated : 13 May 2021 11:02 am

 

Published : 13 May 2021 11:02 AM
Last Updated : 13 May 2021 11:02 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல் 19ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

13ம் தேதி அன்று சனி பகவான் தனது வக்ர நிலையைத் தொடங்குகிறார்.

14ம் தேதி இரவு 11.49க்கு சூர்ய பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.

பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரத்தின் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்குக் கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும்.

பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும்.
கலைத்துறையினருக்கு மனதில் குழப்பம் நீங்கும். அரசியல்துறையினருக்கு பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும்.

மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரியத் தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
***************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

ராசியில் புதன், சுக்கிரன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு (அ.சா) - விரய ஸ்தானத்தில் சூர்யன் என கிரக அமைப்பு உள்ளது.

13ம் தேதி அன்று சனி பகவான் தனது வக்ர நிலையை தொடங்குகிறார்.

14ம் தேதி இரவு 11.49க்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிக்கு சூர்ய பகவான் வருகிறார். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

தொழில் ஸ்தானத்தில் குரு இருப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனைக் குறைத்து பாடங்களில் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி
****************************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு என கிரக அமைப்பு உள்ளது.

13ம் தேதி அன்று சனி பகவான் தனது வக்ர நிலையை தொடங்குகிறார்.

14ம் தேதி இரவு 11.49க்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும்.

தைரியாதிபதி சூரியன் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையைத் தரும்.

நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

பெண்களுக்கு முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல், மனோபயம் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
*********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.தவறவிடாதீர்!

மேஷம்ரிஷபம்மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல் 19ம் தேதி வரைமிதுனம்பலன்கள்ராசிபலன்கள்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்ஜோதிட பலன்கள்PalangalRasipalangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x