Published : 08 Apr 2021 05:25 PM
Last Updated : 08 Apr 2021 05:25 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; ஏப்ரல் 8  முதல் 14ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா) - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

10-04-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-04-2021 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2021 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் உங்களுக்கு பிறரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை வழிபட்டு வாருங்கள். எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
*******************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

ராசியில் குரு (அ.சா) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக அமைப்பு உள்ளது.

10-04-2021 அன்று புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-04-2021 அன்று சுக்ர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2021 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூமி வீடு மனை லாபம் ஏற்படும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். சுபச்செலவு அதிகரிக்கும்.

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்கள் அகலும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும்.

உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடத்திலும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும்.

சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: விநாயகரை வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
*******************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியில் சூர்யன், சுக்ரன், புதன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

10-04-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-04-2021 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2021 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பேரும் புகழும் பெறுவீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதைத் தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும்.

சொத்துகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது.

சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வீடு மனை சம்பந்தமான இனங்களில் அனைத்து விதமான முன்னேற்றம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கட்சியின் மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: நவக்கிரகத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தைப் போக்கும். செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x