

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சதயம்:
கிரகநிலை:
ராகு பகவான் எட்டாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
கிரக மாற்றம்:
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ஏழாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
உலக மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சதய நட்சத்திர அன்பர்களே!
இந்த வருடத்தில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்துப் பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.
கலைத்துறையினருக்கு சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
+: போட்டிகள் குறையும்
-: எதிலும் அவசரம் வேண்டாம்
மதிப்பெண்: 72%
வணங்க வேண்டிய தெய்வம்: பாலாம்பிகையை வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள். சிவபெருமானை வழிபடுங்கள்.
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |