Published : 30 Mar 2021 11:27 AM
Last Updated : 30 Mar 2021 11:27 AM

சிம்ம ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள்; பதவி உயர்வு கிடைக்கும்; நிம்மதி உண்டு; வீண் வாக்குவாதம் வேண்டாம்; பகை தவிர்க்கவும்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.

அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுர்யத்தால் வேலைகளைத் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.
அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும்.
மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

பூரம்:
இந்த மாதம் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதுர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.

உத்திரம்:
இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, திங்கள்
அதிர்ஷ்ட எண்: 1, 2
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x