Published : 22 Mar 2021 09:50 AM
Last Updated : 22 Mar 2021 09:50 AM

வார நட்சத்திர பலன்கள் - ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை (மார்ச் 22 முதல் 28ம் தேதி வரை) 


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

குடும்பத்தில் இனிமையான சூழ்நிலை இருக்கும். குடும்ப உறவுகள் உதவிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்க வேண்டியது வரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொத்துச் சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும்.

அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கியமான பணிகளைச் செய்து அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும்.
வியாபாரம் நம்பிக்கை தருவதாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மனநிறைவை ஏற்படுத்தும்.

பெண்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் ஒரு சிலருக்கு ஏற்படும். திருமண முயற்சிகள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு கிடைக்கும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீரும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

புதன் -
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்பது மனநிறைவைத் தரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் அல்லது முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
தேவையில்லாத பிரச்சினைகள் எதிலும் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து கூற வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி குறை கூறி பேச வேண்டாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி -
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

சனி -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார நிமித்தமாக ஏற்படும் சந்திப்புகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினார் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நண்பர்களோடு சேர்ந்து புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய ஆலோசனை செய்வீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நடக்கும்.
**************

மிருகசீரிடம் -

நன்மைகள் நடைபெறும் வாரம்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

வியாபாரத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு தாங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

வேலை இல்லாத பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்கக் கூடிய நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.


செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன நிறைவு உண்டாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் போடும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். அலுவலகப் பணியில் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் நிதானம் தேவை. தொழில் தொடர்பான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி -
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக பயணங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.

சனி -
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

ஞாயிறு -
சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
வாராஹி அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும்.
*****************

திருவாதிரை -

சிறப்பான மன நிறைவைத் தரக் கூடிய வாரம். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர வகை உறவுகளிடம் சற்று மனவருத்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நிதானப் போக்கைக் கடைபிடித்து பிரச்சினைகளை வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சொத்து தொடர்பான விஷயங்களில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் அல்லது சக ஊழியர்களின் வேலையை சேர்த்துப் பார்க்க வேண்டிய நிலை வரும்.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைஞர்களுக்கு ஒரு சில நல்ல வாய்ப்பு நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வருமானம் திருப்திகரமாக இருப்பினும் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத உதவி கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும்.

புதன் -
இல்லத்தில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் பெருகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தேவையான உதவிகள் தொழிலுக்கு கிடைக்கும்.

வியாழன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும்.

சனி -
கடன் தொடர்பான பிரச்சினையில் சில நெருக்கடிகள் ஏற்படும். நிதானமாக அவற்றை சமாளிக்கவேண்டும். செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். சிக்கனமாக இருக்கவேண்டும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்தியோகம் தொடர்பாக நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவல் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x