Published : 08 Mar 2021 04:27 PM
Last Updated : 08 Mar 2021 04:27 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (மார்ச் 8 முதல் 14ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக நிறைவேறும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும்.

தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரரால் உதவிகள் கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் முடிவாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், நெருங்கிய நண்பர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும்.

செவ்வாய் -
அதிக நன்மைகளை தரும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இரு மடங்காக இருக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வியாபார வாய்ப்பு ஒன்று கிடைக்கும்.

புதன் -
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம், அலுவலக பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாளுங்கள்.

வியாழன் -
வருமானம் தரக்கூடிய காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் வருகை ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உதவியால் முக்கியமான காரியம் ஒன்றைச் செய்து முடிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வெள்ளி -
எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

சனி -
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள் தொழில் ரீதியாக உதவி செய்வார்கள். பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி கிடைக்கும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு நீல மலர்கள் சாற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும்.
**********

உத்திரட்டாதி -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், மனவருத்தங்கள் அகலும்.
பணப்பற்றாக்குறையால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல்-வாங்கல் அறவே கூடாது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். வெளிநாடு வாழ் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு ஏற்படும் நாள்.

சனி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் ஆரோக்கியம் மன நிறைவைத் தருவதாக இருக்கும்.

ஞாயிறு -
தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மனஉறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாக பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள், ஸ்ரீ மகாலட்சுமி நாமாவளி பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் கிடைக்கும்.
*****************

ரேவதி -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை பெரிதாக்கி வீண் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அதேபோல சொத்து தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வதும் நன்மையைத் தரும்.

அலுவலக வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் பணவரவும், புதிய வாடிக்கையாளர்களும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். இந்த வாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சுய தொழில் தொடங்கும் முயற்சிக்கு உதவிகள் கிடைக்கும். ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் தேடி வரும்.

திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு எட்டப்படும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். முக்கியத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சசிகளில் தலையிடாதீர்கள். எதிரிகளிடமிருந்து விலகியிருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த ஒரு சில குறைகளையும் இன்று சரி செய்து விடுவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக ஏற்றம் இருக்கும். தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபார விஷயமாக நீங்கள் சந்திக்க நினைத்திருந்த நபரை சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சகோதரர் குடும்பத்திற்கு ஒரு சில உதவிகளை செய்து தர வேண்டியது வரும்.

ஞாயிறு -
அமைதியாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமீனாட்சி அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x