Published : 01 Mar 2021 17:00 pm

Updated : 01 Mar 2021 17:00 pm

 

Published : 01 Mar 2021 05:00 PM
Last Updated : 01 Mar 2021 05:00 PM

கும்ப ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள்; பண வரவு உண்டு; தடைகள் நீங்கும்; திறமை வெளிப்படும்; வீண் பிரச்சினை விலகும்

march-kumbum-palangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)


கிரகநிலை:

ராசியில் சூர்யன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

07-03-2021 அன்று புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
18-03-2021 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-03-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:
மனம் மகிழும்படியான சம்பவங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த மாதம் பல வழிகளிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவி செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முnனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு தனக்கென்று தனி வழி வைத்துக் கொண்டு தனித்தன்மையுடன் செயல்படும் திறமை உண்டாகும். வெளியூர் பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும்.

பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவு அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் காரியத் தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கும். தொழில் சூடு பிடிக்கும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வது உகந்தது. குலதெய்வ வழிபாடும் செய்து வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்கும்ப ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள்; பண வரவு உண்டு; தடைகள் நீங்கும்; திறமை வெளிப்படும்; வீண் பிரச்சினை விலகும்கும்ப ராசிகும்பம்கும்ப ராசிபலன்கள்மாத பலன்கள்மாத ராசிபலன்கள்ராசிபலன்கள்KumbumKumba rasiKumba rasipalangalMarchMarch palangalMarch kumbum palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x