Published : 01 Mar 2021 03:29 PM
Last Updated : 01 Mar 2021 03:29 PM

தனுசு  ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள், எதிலும் கவனம் தேவை; நல்ல பலன்கள் உறுதி; பணிச்சுமை; காரியத்தில் வெற்றி

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்

07-03-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2021 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-03-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :
பெயர், புகழ், செல்வாக்கு என என்றைக்கும் குறைவில்லாத தனுசு ராசியினரே!

இந்த மாதம் வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. வழக்கத்தை விட செலவுகள் கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவுகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் முதலானவற்றில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் எந்த விஷயத்தைச் சொல்லும்போதும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிற கலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும். தடைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கலாம்.

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

மூலம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் சீரான பலன்களை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பார்கள். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

பூராடம்:
இந்த மாதம் எதிலும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான சம்பவங்கள் உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மைகளைத் தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் வீண் விமர்சனம் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற பூ கொண்டு சிவபெருமானை அர்ச்சித்து வழிபடவும். எண்ணற்ற பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x