Published : 01 Mar 2021 03:03 PM
Last Updated : 01 Mar 2021 03:03 PM

விருச்சிக ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள், பணவரவு; எதிர்ப்பு குறையும்; வாகனத்தில் கவனம்; பதவி உயர்வு வரும்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள் :
07-03-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2021 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-03-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

கோபமிருந்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மைகள் உண்டாகும். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்வார்கள். போட்டிகள் மறையும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு இரண்டுமே உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து எந்தப் பொருட்களையும் வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அந்நியோன்யமாக இருப்பார்கள். உத்தியோலத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும்.

அனுஷம்:
இந்த மாதம் வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.

கேட்டை:
இந்த மாதம் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சினைகள் வரலாம்.

பரிகாரம்: ஸ்ரீமகாதேவரை, தென்னாடுடைய சிவனாரை பூஜை செய்து வாருங்கள். காரியத் தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x