Published : 28 Feb 2021 17:19 pm

Updated : 28 Feb 2021 17:19 pm

 

Published : 28 Feb 2021 05:19 PM
Last Updated : 28 Feb 2021 05:19 PM

மூலம், பூராடம், உத்திராடம் - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -


நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். சொந்தவீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சிக்கு உறவினர்கள் வகையில் பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும், வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் துவங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்.

சேவை சார்ந்த பணிகளை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கக்கூடிய ஒப்பந்தம் உண்டாகும்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். திருமணமாகி புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகப் பணிகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்க வேண்டியது வரும்.

புதன்-
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனைவி வழி உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். ஆன்மிகப் பயணம் தொடர்பான திட்டங்கள் உருவாகும்.

வியாழன் -
எதிர்கால சிந்தனை அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பலவித வாய்ப்புகளை நீங்களாகவே உருவாக்க முயற்சி செய்வீர்கள்.

வெள்ளி -
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நண்பர்களால் வியாபாரம் தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

பூராடம் -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவு ஏற்படும். சொந்த வீடு வாங்கும் முயற்சி முன்னேற்றமாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இப்போது முடிவாகும். திருமணமான தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் நல்ல சேதி கிடைக்கும்.

கடன் தொடர்பான பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி மிகச்சிறப்பான நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கை தரும். உற்பத்தியான பொருட்கள் விரைந்து விற்பனையாகும். ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். உணவுப் பொருள் தொடர்பான வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.தாமதப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும்.

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் தொடர்பாக புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
நிதானம் மிக அவசியம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
தொழில் தொடர்பாக உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். உறவினர்களின் உதவியோடு முக்கியமான காரியம் ஒன்று செய்து முடிப்பீர்கள்.

வெள்ளி-
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். தூரத்து உறவினர் ஒருவரால் மனம் மகிழும்படியான செய்தி கிடைக்கும்.

சனி-
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு -
மன சஞ்சலம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாகப் பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருக பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
**************

உத்திராடம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

அநாவசிய செலவுகள் இனி இருக்காது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தரக்கூடிய அளவிற்கு வருமானம் பெருகும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் முற்றிலுமாகத் தீரும். தாய் தந்தையரிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெற்று, அவர்களின் ஆதரவோடு ஒரு சில முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.

சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுக முடிவு ஏற்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த சில வருத்தங்கள் முடிவுக்கு வந்து ஒற்றுமை ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சுய தொழில் தொடங்கும் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்கும்.

திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு மிக அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

செவ்வாய் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமும், ஆதாயமும் உண்டாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும். திருமண முயற்சிகள் முடிவாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரிய பேச்சுக்கள் சுமுகமாக முடிவாகும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு ஏற்படும்.

சனி-
தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். ஆதாயம் தரக்கூடிய வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். இல்லத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான சந்திப்புகள் மன திருப்தியைத் தரும். குடும்பத்தினருக்காக செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.
*************

மூலம், பூராடம், உத்திராடம் - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை


தவறவிடாதீர்!



மூலம்பூராடம்உத்திராடம் - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரைஉத்திராடம்பலன்கள்வார பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MoolamUtthiradamPooradamPalangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x