Published : 28 Feb 2021 16:29 pm

Updated : 28 Feb 2021 16:29 pm

 

Published : 28 Feb 2021 04:29 PM
Last Updated : 28 Feb 2021 04:29 PM

விசாகம், அனுஷம், கேட்டை - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -


அதிக நன்மைகள் நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.

சொந்தத் தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும்.

வங்கி மற்றும் நிதி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் கலைகள் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய்-
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாகும். நிதானமாக இருப்பது நல்லது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

புதன்-
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும்.

வியாழன்-
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும்.

வெள்ளி-
செயல்களில் நிதானம் தேவை. உடனுக்குடன் முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும், வெளியிடத்திலும் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குருபகவான் வழிபாடு செய்யுங்கள். குரு கவசம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************

அனுஷம் -

முயற்சிகளில் வெற்றிகளை காணக்கூடிய வாரம்.

தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும். மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் ஏற்பட்ட வருத்தங்கள் தீரும்.

இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அதற்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சகோதர ஒற்றுமை பலமாகும். சகோதரர்களால் உதவிகளும் கிடைக்கும். அலுவலகப் பணியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியும் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான வருமானம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பயணங்கள் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துகள் சேரும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மைகள் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டாலும் சமாளித்து வேலைகளைச் செய்வீர்கள்.

புதன்-
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன்-
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்களாக மாறும்.

வெள்ளி-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

சனி-
அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். அமைதியும் தியானமும் மிக மிக முக்கியம். பயணங்கள் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்குங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்ய வேண்டும். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
**************

கேட்டை -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும் குடும்பத்தினரிடம் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றும் சிந்தனை அதிகமாகும். அலுவலகத்தில் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளும் பதவி உயர்வு உள்ளிட்டவையும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டாகும்.

ஆடை, அணிகலன் மற்றும் ஆடம்பரப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திரபாக்கியம் உருவாகும் சூழல் உருவாகும். . பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தம் ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும் அளவுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய்-
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன்-
மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன்-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.

சனி -
வியாபார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். தம்பதியர் மனம் விட்டுப் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக்கூடிய நாளாக இருக்கும்.

ஞாயிறு-.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களிடம் தொழில் பற்றிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார விஷயமாக பயணம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மகிழ்ச்சிகரமான செலவுகள் உண்டாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



விசாகம்அனுஷம்கேட்டை - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரைகேட்டைபலன்கள்வார பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்VisakamAnushamKettaiPalangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x