Published : 28 Feb 2021 12:14 PM
Last Updated : 28 Feb 2021 12:14 PM

புனர்பூசம், பூசம், ஆயில்யம் - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சொத்துகள் பிரச்சினைகளில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது, பிரச்சினைகள் வழக்குகள் என செல்ல வேண்டாம். அது உங்களுக்கு எதிராக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் காண்பார்கள்.

இதுவரை வராமலிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

மாணவர்கள் கல்வியில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
எடுத்த காரியங்களை முழுமையான வெற்றியோடு செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
எதிர்பார்த்து கொண்டிருந்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். தொழில் முயற்சிகள் சாதகமாக இருக்கும். அபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்காக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் இயல்பான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திரபாக்கியம் பற்றிய நல்ல செய்தி இன்று கிடைக்கும்.

வியாழன்-
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பேச்சுவார்த்தை ஏதேனும் செய்வதாக இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்ப்பீர்கள்.

சனி-
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீகோதண்டராமரை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
************

பூசம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தை காணக் கூடிய வாரம்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் மறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் இனி இல்லாமல் போகும்.
உறவுகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். தாய் தந்தையரின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும். அவர்களால் பொருளாதாரப் பிரச்சினைகளில் தீர்வு ஏற்படும்.

உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். அயல்நாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் பலமாக இருக்கிறது.

தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிதாக வேறு சில தொழில்கள் தொடங்குவது போன்றவை நடக்கும்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது, புது கிளைகள் தொடங்குவீர்கள் நடக்கும்.

பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் தேவையான உதவிகள் கிடைக்கும் சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரக் கூடிய அளவிற்கான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும் நாள். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும்.

புதன் -
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்குவது, சொந்த வீடு வாங்குவது போன்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

சனி-
அதிக நன்மைகள் நடைபெறும் பண வரவு தாராளமாக இருக்கும் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தோடு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வரும் வாய்ப்புகளும் உண்டு அல்லது ஆலய தரிசனம் ஏற்படும்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீதுர்கை வழிபாடு நன்மைகளைத் தரும், ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
************

ஆயில்யம் -

எடுத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய வாரம்.

தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடிப்பீர்கள்.

கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் முன்னேற்றமான தகவல்களாகவே கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும்.

பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்துகள் விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.


செவ்வாய்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது.

புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.

வியாழன் -
வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.

வெள்ளி-
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக் கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.

சனி-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்துகள் சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்றாக படித்துப் பார்க்க வேண்டும்.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீசக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x