Published : 10 Feb 2021 09:58 AM
Last Updated : 10 Feb 2021 09:58 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பருடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப் பான சூழல் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும். வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீ்ர்கள்.

துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: நெடுநாட்களாக மனதை வருத்திய பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உடன் பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மறைமுகப்போட்டி களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x