Published : 07 Feb 2021 07:18 PM
Last Updated : 07 Feb 2021 07:18 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

இந்த வாரம் முழுவதும் மிகுந்த சுறுசுறுப்புடன் செயலாற்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. சுய தொழில் தொடங்கும் முயற்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அலுவலக வேலையில் பரபரப்பாக செயல்பட்டு அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளும் சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகளை விடுத்து தனியாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். அந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் கிடைக்கும்.

தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு இயல்பாக சொத்துச் சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் கைகூடும்.

இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்த வாய்ப்புகள் கிடைத்து நிறைவான வருமானம் கிடைக்கும்.

புதன் -
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது.

வெள்ளி -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

சனி -
கவனமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும், வெளியிடத்திலும் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். தேவையற்ற விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம்.

ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் தொழில் தொடர்பான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நல்லது நடக்கும்.
*********************

பூராடம் -

நன்மைகள் நடக்கும் வாரம் இது.

குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாக இருக்கும். பணி இடமாற்றம் வீடு மாற்றம் போன்றவை நடக்க வாய்ப்பு உள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குறிப்பாக அயல்நாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.

திருமணமான தம்பதிக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் சேதி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். அதற்குத் தேவையான பண உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.

இல்லத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலுவைகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது. வியாபார நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கான பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும், கல்வி தொடர்பாக தேவையான கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக்கூடிய நாள். வருமானம் இரட்டிப்பாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழில் அல்லது வியாபார விரிவாக்கத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவி உறுதியாகும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

புதன் -
நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கைப்பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை கையாளும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

சனி -
வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். பண உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். மகிழ்ச்சிகரமான செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************

உத்திராடம் -

எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் எண்ணியபடியே நிறைவேறும்.

பணவரவு தாராளமாக இருக்கும். தாய்வழி உறவுகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குறிப்பாக நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகள் இப்போது விற்பனையாகும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் சேதி வரும்.

சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். பண வரவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபார விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன் -
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும்.

வியாழன் -
புதிய வாகனம் வாங்கும் சிந்தனை உருவாகும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி -
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x