Published : 28 Jan 2021 13:25 pm

Updated : 28 Jan 2021 13:25 pm

 

Published : 28 Jan 2021 01:25 PM
Last Updated : 28 Jan 2021 01:25 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும்.

ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.

வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுர்யத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும்போது கூடுதல் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்ப்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர சிறந்த காலகட்டம் இது.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்குச் சரியான பதவிகளை அளிப்பார்கள்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுவலம் உண்டாகும்.
*********************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் லாபம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும்.

கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும்.

குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.
****************

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

30ம் தேதி சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

கவுரவம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணப் பிரச்சினை தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரச்சாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: குரு பகவானை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணப் பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


துலாம்விருச்சிகம் விருச்சிகம் தனுசு ; வார ராசிபலன்கள்; ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரைதனுசுவார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ThulamViruchigamDhanusuVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x