Published : 24 Jan 2021 06:31 AM
Last Updated : 24 Jan 2021 06:31 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டிருந்த காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்கள் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சற்று அயர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்: செலவினங்கள் கூடும். நீண்டநாட்களாக செல்ல நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரருடன் நிலவிய மனஸ்தாபம் நீங்கும்.

கடகம்: வேலைக்காக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். வீட்டை ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் உண்டாகும்.

சிம்மம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.

கன்னி: எதையும் சமாளிக்கும் மன தைரியம் பிறக்கும். பணப்பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த சலசலப்புகள் நீங்கும்.

துலாம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டுமென்று யோசிப்பீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள்.

விருச்சிகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களை நல்ல கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மகரம்: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. தாயாரின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

கும்பம்: வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். எதிர்பாராத பயணம் ஏற்படலாம். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x