Published : 23 Jan 2021 06:32 AM
Last Updated : 23 Jan 2021 06:32 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல் போக்கு விலகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்க திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்களை அவதூறாகப் பேசினாலும் அதை பொருட்படுத்த வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கன்னி: சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உதவுவார்கள்.
துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் தெரியும்.
தனுசு: உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மகரம்: நீண்டநாள் கனவு நனவாகும். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கும்பம்: தாய்வழி உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படக் கூடும். நட்பு வட்டம் விரியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதி பெருகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT