Published : 22 Jan 2021 06:42 AM
Last Updated : 22 Jan 2021 06:42 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூற வேண்டாம்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்படும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேச வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

மகரம்: அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x