Published : 16 Jan 2021 06:27 AM
Last Updated : 16 Jan 2021 06:27 AM
மேஷம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
ரிஷபம்: கடந்த கால இனிய சம்பவங்கள் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.
மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். கடனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் தொகை வசூலாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதரர் உதவுவார்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT