Published : 03 Jan 2021 04:34 PM
Last Updated : 03 Jan 2021 04:34 PM

மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -

நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சாதகமாகவும் லாபகரமாகவும் இருக்கும்.

குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். சகோதரர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும். பாகப்பிரிவினைகள் சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.

அலுவலக நெருக்கடிகள் தீரும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

பெண்களுக்கு தங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானத்திற்கு வழி வகை செய்யும் வாய்ப்புகள் தேடி வரக் கூடிய நாள். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். கடன் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள்.

புதன் -
இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் பற்றிய பேச்சுக்கள் முடிவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.

வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த அரசின் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் உறுதியாகும். தொலைபேசி வழியாக கிடைக்கும் தகவல் மன மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

சனி -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் நிதானம் காக்க வேண்டும்.

ஞாயிறு -
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இன்று எதிர்பாராத வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
*********************

பூரம் -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு பணி தொடர்பான தேர்வுகளில் சிறந்த முன்னேற்றத்தை காணலாம். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.

முயற்சிகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் தாமதங்கள் இனி இருக்காது. ஒருசிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய் -
அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகளை இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். எதிர்காலம் கருதி வருமானத்திற்கு வழி வகை செய்யும் திட்டங்கள் தீட்டுவீர்கள்.

புதன் -
குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேவையான உதவிகள் செய்வார்கள்.

வியாழன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியுடன் முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் வகையில், புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி இருக்கும்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய விஷயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
வீண்செலவுகள் ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். உடல்நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களை தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பார்வதி அன்னையை வணங்குங்கள். அன்னை உமையவளுக்கு மலர்கள் சாற்றி அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.
********************

உத்திரம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த முயற்சிகள் இப்பொழுது முழுமையாக நிறைவேறும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். சகோதர வழியில் ஏற்பட்ட பாகப்பிரிவினை பிரச்சினைகள் சுமுகமாக தீரும். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும்.

அலுவலக வேலைகளில் சகஜமான நிலையே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
பெண்களுக்கு சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கக் கூடிய நாள். பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

செவ்வாய் -
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டுபண்ணும். அமைதியாக இருப்பதும், அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பதும் நன்மைகளைத் தரும்.

புதன் -
நேற்றைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கி உதவி கிடைக்கும். அரசு தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும்.


வியாழன் -
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் வரவேண்டிய சலுகைகள் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு -
எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலயங்களில் உள்ள அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x