Published : 28 Dec 2020 07:27 PM
Last Updated : 28 Dec 2020 07:27 PM

துலாம் ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; தாமதம் நீங்கும்; பண வரவு உண்டு; மனதில் தெளிவு; வீடு - மனை யோகம்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

06-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

வாழ்க்கையில் முன்னேற எதிர் நீச்சல் போடத் தயங்காத துலா ராசியினரே!

நீங்கள் அனைவரையும் சரிசமமாக மதிப்பவர்கள். இந்த மாதம் வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்துப் பேசாமல் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டுப் பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள்.
பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது.

சுவாதி:
இந்த மாதம் பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம். கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது. வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும். புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிர பகவானை வணங்கி வாருங்கள். மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும்.

மகாலக்ஷ்மி தரிசனம் செய்வதும் வளம் சேர்க்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x