சனிப்பெயர்ச்சி 2020 ; பொது பலன்கள் ; பொருளாதார எழுச்சி; ஆலய கும்பாபிஷேகம்; மடாதிபதிகளுக்கு புதிய சட்டம்; முக்கிய வழக்கில் தீர்ப்பு! 

சனிப்பெயர்ச்சி 2020 ; பொது பலன்கள் ; பொருளாதார எழுச்சி; ஆலய கும்பாபிஷேகம்; மடாதிபதிகளுக்கு புதிய சட்டம்; முக்கிய வழக்கில் தீர்ப்பு! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வரக்கூடிய சனிப்பெயர்ச்சியையொட்டி பொது பலன்ககளைப் பார்ப்போம்.

சனி ஆட்சியாக மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் தடை அகலும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும்.

அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக உயரும்.

அவரவர் தகுதிக்கேற்ற வகையில், கடன் உருவாகும். இடி மின்னல் அதிகமாக இருக்கும். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும்.

தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம்.
உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிக அளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும்.

அதேவேளையில், புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைப்பது நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும்.

பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in