Published : 13 Dec 2020 09:30 PM
Last Updated : 13 Dec 2020 09:30 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 14 முதல் 20ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

செயல்களில் வெற்றி கிடைத்து மன மகிழ்ச்சி அடையக் கூடிய வாரம்.

தாமதப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி தடையின்றி நடந்தேறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து வெற்றிகளைக் காண்பீர்கள்.

சொந்த வீடு வாங்குவது, நிலபுலங்கள் வாங்குவது, ஆடை ஆபரணங்கள் வாங்குவது என அனைத்தும் இனி தடையின்றி நடந்தேறும். சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவதற்கான கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலமாக முக்கிய தேவைகள் பூர்த்தியாகும்.

அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த அழுத்தங்கள் முற்றிலுமாக மாறும். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு முதலீடுகள் அயல்நாட்டில் இருந்து நண்பர்கள் மூலமாக கிடைக்கலாம்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும் வாரம்.
சொத்து தொடர்பான பிரச்சினைகள் மிக எளிதாகத் தீரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும்.

செவ்வாய் -
திடீர் பண வரவுகளால் மனம் மகிழும் நாள். கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் தீரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளைப் பார்க்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சராசரி போக்கு இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வியாழன் -
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காணக்கூடிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் தேடி வரும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் முழுமையாகத் தீரும்.

வெள்ளி -
அலுவலகத்தில் நிதானப் போக்கை கடைபிடியுங்கள். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணத்தைக் கையாளும் போது அதிக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.

சனி -
தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

ஞாயிறு -
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும் நாள். நண்பர்கள் மூலமாக வருமானம் தரக்கூடிய வியாபார விஷயங்கள் நடக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள். அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

பூராடம் -

தீவிரமாக செயல்பட்டு காரிய வெற்றிகளை காணக்கூடிய வாரம்.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். தந்தை வழி சொத்துகள் தொடர்பாக பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும்.

சுயதொழில் தொடங்குவது, வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் இந்த வாரம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

அலுவலகப் பணிகளில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். தேவையான முதலீடுகளும் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணக்கூடிய வாரமாக இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கும் வருமானம் திருப்திகரமாகவே இருக்கும்.

பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும். சகோதரர் வகையில் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் தீரும். தந்தையார் உங்களுக்கு பெரும் உதவியைச் செய்வார். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பலவித நன்மைகள் தேடி வரக்கூடிய நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து மனநிறைவு கொள்ளும் நாள். அலுவலகப் பணிகளில் சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள்.

புதன் -
அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் உடனே எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கடன் கொடுப்பது, வாங்குவது கூடாது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிக்காட்ட வேண்டாம்.

வியாழன் -
வீடு வாகனம் போன்றவற்றால் ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். சொத்து தொடர்பான பிரச்சினைகள் எளிதாக முடிவுக்கு வரும். சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள்.

வெள்ளி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உருவாகும்.

சனி -
பணவரவு சரளமாக இருக்கக்கூடிய நாள். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும். வியாபார வளர்ச்சி நன்றாகவே இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.

ஞாயிறு -
செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும். வீண் செலவுகளைச் செய்ய வேண்டாம். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாக இருக்கும். அலைச்சல் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************

உத்திராடம் -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறக் கூடிய வாரமாக இருக்கும்.

கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் உற்சாகத்தைத் தரும். அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். வழக்கு தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும்.

சொத்துப் பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் சேதி கிடைக்கும். கலைஞர்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் செய்வது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும், எதிர்பாராத வருமானமும் கிடைக்கும்.

செவ்வாய் -
மன நிறைவைத் தரக் கூடிய நாள். குழப்பங்கள் தீரும். பணவரவு தாராளமாக இருக்கும்.எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாழன் -
சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

சனி -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த வியாபாரம் தொடர்பான நல்லசெய்தி கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவல் தொடர்பான முக்கிய சந்திப்புகள் நடக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் செய்வீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நரசிம்ம காயத்ரி உச்சாடனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x