Published : 13 Dec 2020 08:05 PM
Last Updated : 13 Dec 2020 08:05 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி ; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 14 முதல் 20ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -

பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். தந்தை வழி உறவினர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும்.

பெற்றோர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆனாலும் தந்தையின் உடல்நலத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நீண்டநாளாக வராமலிருந்த பணம் வசூலாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும்.

பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.

வியாபாரம் படிப்படியாக சீரான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடரும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.

செவ்வாய் -
எதிர்காலம் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகளும் இன்று சுமுகமாக முடிவுக்கு வரும். தந்தை வழி உறவுகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக பேசி முடிக்கப்படும்.


புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சிறிய அளவிலான வியாபார முயற்சியில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வியாழன் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும். தொழில் அல்லது வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான செய்திகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
மனசஞ்சலம் ஏற்படும். பயணங்களில் கவனம் வேண்டும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகப் பணியில் சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை வருத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.
***************

சித்திரை -

தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும்.குடும்பத்தினர் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனவருத்தங்கள் அகலும். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். மருத்துவச் செலவுகள் இனி இருக்காது.

கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பெரிய அளவிலான பண வரவு கிடைக்கும். அலுவலகப் பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உற்பத்திப் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பணியில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு ஏற்படும்.

செவ்வாய் -
எந்த ஒரு வேலையையும் சரியாகத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான போக்கு இருக்கும். வியாபார நிமித்தமான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

சனி -
எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.

ஞாயிறு -
அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீவாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும்.
********************

சுவாதி -

தீவிரமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள கூடிய வாரம்.

பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும்.

அலுவலகப் பணிகளில் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் மிக எளிதாகவே அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். செலவுக்கேற்றபடி வருமானம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருந்தால் இந்த நாள் மிக எளிதாகக் கடந்து செல்லும்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் சமாதானம் ஆகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்கள் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத பணவரவு ஒரு சிலருக்கு கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அதிக நன்மைகள் ஏற்படும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x