Published : 12 Dec 2020 06:50 AM
Last Updated : 12 Dec 2020 06:50 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொந்தரவுகள் விலகும். செயல்திறன் அதிகரிக்கும்.

ரிஷபம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து ஆச்சரியப்படுத்துவார். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

மிதுனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள்.

கடகம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும் பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள்.

சிம்மம்: எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

துலாம்: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவ செலவு ஏற்படக் கூடும்.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்..

மகரம்: எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிட்டும்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைபட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை அரவணைத்துச் செல்வீர்கள்..

மீனம்: எதையோ இழந்ததைப் போல மனம் சஞ்சலப்படும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x