Published : 05 Dec 2020 06:29 AM
Last Updated : 05 Dec 2020 06:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: உடல் உஷ்ணத்தால் சில அவஸ்தைகள் ஏற்படலாம். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். ஊர் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்திக் காட்டுவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. விஐபிகளின் உதவி கிடைக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தோருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். வேலைக்கான முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும்.

மகரம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

கும்பம்: சமயோசித புத்தியுடன் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். தடைபட்ட வீடு கட்டும் பணி வேகமெடுக்கும்.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x