Published : 04 Dec 2020 11:41 am

Updated : 04 Dec 2020 11:41 am

 

Published : 04 Dec 2020 11:41 AM
Last Updated : 04 Dec 2020 11:41 AM

உத்திரட்டாதி, ரேவதி; சாதக நட்சத்திரங்கள்; சிக்கலான நட்சத்திரங்கள்; பலம் கொடுக்கும் நட்சத்திரங்கள் - 27 நட்சத்திரங்கள் -  ஏ டூ இஸட் தகவல்கள் - 97  

27-natchatirangal-a-to-z-97

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.


நட்சத்திரங்களுக்கான தாராபலம் பற்றிப் பார்த்து வருகிறோம். இந்தப் பதிவில் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கான தாரா பலத்தை பார்க்கலாம்.

அன்பார்ந்த வாசகர்களே.

இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன், 87வது பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளவும் அல்லது தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் இந்த தாராபலம் பற்றிய முழுவிவரத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

தொடர்வோம்.

உத்திரட்டாதி நட்சத்திரம்

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -

உத்திரட்டாதி, பூசம், அனுஷம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும். சுபகாரியங்கள் அனைத்தும் செய்யலாம். ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது, மேலும் முடி திருத்துதல், சவரம் செய்தல், எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம் போன்றவை கூடாது. மற்றபடி அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -

ரேவதி, ஆயில்யம், கேட்டை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம். தொழில் தொடங்குவது, வியாபாரம் ஆரம்பிப்பது, பணவரவு தொடர்பான விஷயங்கள் போன்ற அனைத்துக்கும் இந்த சம்பத்து என்னும் செல்வ வளத்தை தரக்கூடிய தாரையாகும்.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -

பரணி, பூரம், பூராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் பலமடங்கு ஆதாயத்தைத் தரக்கூடியதாக இருக்கும். வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல் போன்றவை மேற்கொள்ளலாம்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -

ரோகிணி, அஸ்தம், திருவோணம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வேலைக்கு முயற்சி செய்வது, பதவி உயர்வு பெற்று பணியில் சேர்வது, இடமாற்றம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது, தொழில் வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவது, அல்லது அதன் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது போன்றவை உங்களுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

சதயம், திருவாதிரை, சுவாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் உங்களுக்கு நன்மை தரக்கூடியாத இருக்கும். ஆதாயம் தரக்கூடிய காரியங்களைச் செய்யலாம். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ளலாம். அயல்நாடு தொடர்பு உடைய தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளலாம்.

அதி மைத்ர தரை நட்சத்திரங்கள் -

பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ரம் எனும் அதிக நன்மைகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். அயல்நாட்டுப் பயணங்கள், அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, ஆன்மிகப் பெரியோர்களைச் சந்திப்பது, ஆலய தரிசனங்கள் மேற்கொள்வது என அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -

அஸ்வினி, மகம், மூலம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து என்னும் கடுமையான பாதிப்புகளைத் தரும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் விபத்தால் ஏற்படும் சேதாரம் போல கடுமையான பாதிப்புகளைத் தரும். பயணம் செய்யக்கூடாது, கடன் வாங்கக் கூடாது, புதிய முயற்சிகள் செய்யக்கூடாது.

பிரத்தியக்குத் தாரை நட்சத்திரங்கள் -

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள். பிரத்தியக்கு என்றால் பிறத்தியாருக்கு நன்மை என்று பொருள். ஆக எந்தவொரு காரியம் செய்தாலும் அது மற்றவருக்கு நன்மையாக இருக்குமே தவிர, உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அர்த்தம். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, வியாபார விஷயங்களில் ஈடுபடுவது, தொழில் தொடர்பான விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும். வதை என்றால் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிப்பது என்று பொருள். எனவே, இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்கு தீராத துயரங்களைத் தரும்.
***********************

ரேவதி நட்சத்திரம்


ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -

ரேவதி, ஆயில்யம், கேட்டை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம தாரை நட்சத்திரங்களாக வேலை செய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -

அஸ்வினி, மகம், மூலம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும். பலவித யோகங்களையும், நன்மைகளையும் தரக்கூடியது.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும். அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் வாங்க ஏற்றது.

சாதக தாரை நட்சத்திரங்கள் -

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்களாகும். எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தந்து யோகங்கள் பெற்றுத் தரும்.

மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும். லாபங்களும், வருமானத்தையும் இரட்டிப்பாக்க மாற்றி தரக்கூடியது.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

உத்திரட்டாதி, பூசம், அனுஷம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அது மைத்ர தாரை நட்சத்திரங்களாகும். அதிக நன்மைகளைத் தரக்கூடியது. அயல்நாட்டுப் பயணங்கள், வெளியூர்ப் பயணங்கள் போன்றவை செய்ய ஏற்றது.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -

பரணி, பூரம், பூராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்களாகும். எந்த ஒரு காரியமும் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளைத் தந்து மன உளைச்சலைத் தரக்கூடியதாக மாறும்.

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -

ரோகிணி, அஸ்தம், திருவோணம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது. நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு நன்மைகளைத் தரும். உங்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் தராது.

வதை தாரை நட்சத்திரங்கள் -

சதயம், திருவாதிரை, சுவாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும், எந்தவொரு காரியமும் உங்களுக்கு தீராத துயரத்தை தரக்கூடியதாக இருக்கும். மன நிம்மதியைக் கெடுத்து உடல் நலத்தையும் பாதிக்க வைக்கும்.


அன்பார்ந்த வாசகர்களே. இந்த தாராபலம் எனும் நட்சத்திரப் பட்டியல் சாதாரணமான விஷயம் அல்ல.

"தாரா (பலம்) அறிந்தால் சோரம் போகார்" என்ற ஜோதிடப் பழமொழியை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு வெற்றியாளர்களும் அறிந்தோ அறியாமலோ இதன் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்... ஜோதிடர்களே தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை அவர்களுடைய நட்சத்திரத்தையும், அன்றைய தின நட்சத்திரத்தையும் இணைத்தே அவர்களுடைய பிரச்சினைகளை ஒரு நொடியில் கண்டுகொள்வார்கள்.

இப்படி பலவகையிலும் இந்த தாரா பலமானது மிகமிக உதவிகரமாக... வாழ்க்கையில் உயரத்தை தொடுவதற்கும்... பக்கபலமாக இருக்கிறது. நீங்கள் அணிகின்ற உடை முதல், உண்ணுகின்ற உணவு வரை, வாங்குகின்ற பணம் முதல், அதை செலவழிக்கக் கூடிய விஷயம் வரை..... அனைத்திலும் இந்த தாராபலம் என்னும் நட்சத்திரங்களே முடிவு செய்கின்றன.

இதைப் புரிந்து உணர்ந்து கொண்டால் இந்த தாராபலம் எனும் நட்சத்திரங்களின் பலத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தாலே இந்த அற்புதமான பலன்களை நீங்கள் உணரமுடியும்.

மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


உத்திரட்டாதி ரேவதி; சாதக நட்சத்திரங்கள்; சிக்கலான நட்சத்திரங்கள்; பலம் கொடுக்கும் நட்சத்திரங்கள் - 27 நட்சத்திரங்கள் -  ஏ டூ இஸட் தகவல்கள் - 97ரேவதிசாதக தாரைவதை தாரைஜென்ம தாரை27 நட்சத்திரங்கள்ஏ டூ இஸட் தகவல்கள் - 97சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்27 natchatirangalUtthirattadhiRevathiA to z - 97

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x