Published : 02 Dec 2020 06:53 AM
Last Updated : 02 Dec 2020 06:53 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராது மனத்தாங்கல் ஏற்படக் கூடும். செல்போனில் பேசிக் கொண்டே சாலையில் செல்வது, வாகனம் ஓட்டுவதை தவிருங்கள் வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மூத்த சகோதரர் உதவுவார்.

துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும்.

தனுசு: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள் திரும்ப வருவார்கள். பணவரவு உண்டு.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் பால்ய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.

மீனம்: தெய்வ பலம் கூடும். காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x