Published : 29 Nov 2020 17:34 pm

Updated : 29 Nov 2020 17:34 pm

 

Published : 29 Nov 2020 05:34 PM
Last Updated : 29 Nov 2020 05:34 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை)

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -


எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.

குடும்ப உறவுகள் பலப்படும். உறவுகளிடம் ஏற்பட்ட மன வருத்தம் அகலும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருந்த பணிச்சுமை அகலும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக மாறும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

தொழில் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தங்கள் நிறைவேறும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு உண்டு.
பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். நிலம் தொடர்பான தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு திருப்திகரமான வருமானம் உண்டாகும்.

பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும்.

கலைஞர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் நபர் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஒன்று உருவாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் நிம்மதி இருக்காது. மாலை நேரத்தில் கவலை தரும் செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். தேவையற்ற கருத்துக்களை எங்கும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

புதன் -
அலுவலகப் பணிகளில் அதிக முனைப்போடு செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வியாழன் -
கிடைக்கின்ற செய்திகள் யாவும் மன நிம்மதியையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.

வெள்ளி -
எதிர்காலம் கருதி சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைக் காணக்கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ஞாயிறு -
பொறுமை, நிதானம் மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது கூடாது. தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப்பெருமானை வணங்குங்கள். விநாயகர் பாமாலை படியுங்கள். அதிக நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
******************

பூராடம் -

சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.

குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். அதற்குத் தேவையான பண வரவு தாராளமாக இருக்கும். உறவினர்களாலும் சகோதரர்களாலும் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அலுவலகப் பணிகளில் நிம்மதி நீடிக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். மனதிலிருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

மாணவர்கள் ஆரோக்கியத்திலும் கவனம் எடுப்பது நல்லது. கலைஞர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத நன்மைகள் கிடைக்கக் கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். வியாபாரப் பயணங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

செவ்வாய் -
சுறுசுறுப்பாக பணியாற்றி வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இன்று கடன் தொடர்பான நல்ல தகவல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எந்த விஷயமாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடித்து ஆராய்ந்த பின்பே முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவு எடுத்தால் உங்களுக்கு எதிராகத் திரும்பும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

வியாழன் -
அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி -
பயணங்களால் ஆதாயம் கிடைக்கக் கூடிய நாள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி உறுதியாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இன்று கையெழுத்தாகும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சனி -
திட்டமிட்டு சில விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு திட்டம் தீட்டுவீர்கள்.

ஞாயிறு -
திட்டமிட்ட காரியங்களும் திட்டமிடாத காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பணவரவு எதிர்பாராத வகையில் தாராளமாக இருக்கும். பழைய கடன் அடைக்க வாய்ப்பு உண்டு. புதிய கடன் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களாலும் உறவினர்களாலும் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். மொத்தத்தில் மனநிறைவான நாளாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஹனுமன் வழிபாடு செய்யுங்கள். அனுமனுக்கு வடை மாலை சாற்றி வழிபட நன்மைகளை அதிகமாக்கும்.
****************

உத்திராடம் -

சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருமானத்தை அதிகப்படுத்தும் வாரம்.

பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடுவீர்கள். அலுவலகப் பணிகளில் தீவிரமாக பணியாற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் சுமூகமான முடிவு ஏற்படும். திருமண முயற்சிகள் கை கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாடு தொடர்பு உடைய தொழில் ஒப்பந்தம் இன்று உறுதியாகும்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

புதன் -
எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வங்கியில் எதிர்பார்த்திருந்த கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு பலரும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
பொறுமையாக எந்தவொரு விஷயத்தையும் கையாள வேண்டும். எதிர்வரும் பிரச்சினைகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டாம்.

வெள்ளி -
முடிக்காமல் இருந்த அனைத்து வேலைகளையும் இன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதரர்களால் கிடைக்கும்.

சனி -
வியாபார நிமித்தமான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள், தேவையான உதவிகள் முதலானவை கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தொடர்பான மன நிறைவைத் தரும் தகவல் கிடைக்கும்.

ஞாயிறு -
மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பரபரப்பாக இருப்பீர்கள். எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். எதிர்காலம் கருதி சில திட்டங்களை வகுப்பீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசி சில விஷயங்களை சரி செய்து கொள்வீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படியுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். காரியம் யாவும் வெற்றியைக் கொடுக்கும்.
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!


மூலம்பூராடம்உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை)உத்திராடம்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MoolamPooradamUtthiradamVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x