Published : 27 Nov 2020 06:15 AM
Last Updated : 27 Nov 2020 06:15 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: சகோதரர் வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: சவாலான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கடன் தொகை வசூலாகும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். முன்கோபம் விலகும். மனைவியுடன் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வெளியூர் செல்வதற்குத் திட்டமிடுவீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் ஏற்படக் கூடும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடனைத் தீர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம்: மனதை உறுத்திவந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சுபகாரியங்களில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள்.

கும்பம்: முன்கோபம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கூடிவரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x