Published : 26 Nov 2020 07:32 PM
Last Updated : 26 Nov 2020 07:32 PM

மகரம்; டிசம்பர் மாத பலன்கள் ; உடனிருப்போர் துரோகிகள் உஷார்; கடன் பிரச்சினை தீரும்; சாமர்த்தியப் பேச்சு; எதிலும் கவனம் தேவை! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் குரு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது, சூர்யன், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

10-12-20 அன்று காலை 6.02 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

12-12-20 அன்று மாலை 3.10 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

12-12-20 அன்று மாலை 3.43 மணிக்கு புதன் பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-20 அன்று காலை 3.09 மணிக்கு சூர்ய பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் ராசிக்கு மாறுகிறார்.

30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்:

தோல்விகளை வெற்றியின் படிகளாகக் கருதி எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர ராசிக்காரர்களே!

இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். நெருப்பு மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கை தேவை.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளப் போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

கலைத்துறையினருக்கு வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தன வரவில் தடைகள் உண்டாகி கடும் சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

மாணவர்கள் கவனம் சிதறவிடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீகச் சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டவை நிறைவேறும்.

திருவோணம்:

இந்த மாதம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தைக் குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x