Published : 26 Nov 2020 03:04 PM
Last Updated : 26 Nov 2020 03:04 PM

சிம்மம்; டிசம்பர் மாத பலன்கள் ; நிதானம் தேவை; பண வரவு உண்டு; உடல்நலனில் கவனம்; மதிப்பு, மரியாதை கூடும்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுகஸ்தானத்தில் கேது, சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

10-12-20 அன்று காலை 6.02 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

12-12-20 அன்று மாலை 3.10 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

12-12-20 அன்று மாலை 3.43 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-20 அன்று காலை 3.09 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத குணமும் கொண்ட சிம்மராசியினரே!

இந்த மாதம் சின்ன விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போலவே மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லை என்று டென்ஷன் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.

மாணவர்கள் திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

மகம்:

இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

பூரம்:

இந்த மாதம் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். எந்தவொரு காரியத்தைச் செய்யும் முன்பும் அதை எப்படிச் செய்வது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கோதுமைத் தூளை காகத்திற்கு வைக்க பிரச்சினைகள் குறையும். சனி பகவானை வணங்குங்கள். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x