Published : 25 Nov 2020 12:14 pm

Updated : 25 Nov 2020 12:14 pm

 

Published : 25 Nov 2020 12:14 PM
Last Updated : 25 Nov 2020 12:14 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


இந்த வாரம் சின்ன விஷயத்திற்குக் கூட கோபம் வரலாம்.

நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும்.

நீங்கள் நினைப்பது போல் மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்குக் கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும்.

பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும்.

எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும் சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும்.

வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலன் கிடைப்பது அரிது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செயல்படுவது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்: துர்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். காரியத் தடைகள் அகலும்.
****************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கூடும்.

நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. வழக்கத்தை விட செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம்.

வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும்.

உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். மாணவர்களுக்கு: படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்..

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
*******************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.

மனம் எந்தவொரு காரியத்திலும் அவசர முடிவுகளை எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும்.


வெளியூர், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள்.
கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பண பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சக மாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

பரிகாரம்: நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும். பொருளாதாரம் உயரும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


மேஷம்ரிஷபம்மிதுனம் ; வார ராசிபலன்கள்; நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் தேதி வரைமிதுனம்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MeshamRishabamMidhunamVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x