Published : 22 Nov 2020 03:11 PM
Last Updated : 22 Nov 2020 03:11 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை) 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் வாரம்.

தேவையான உதவிகள் தேடி வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பயணங்களாலும் ஆதாயம் உண்டாகும்.

அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உரிய மரியாதை அந்தஸ்து கிடைக்கும். கவனிக்கப்படாமல் இருந்த உங்கள் திறமை இப்போது கவனத்திற்குள்ளாகும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
சற்று அதிகமான நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நாள். ஒரு வேலை முடியும் முன்னே அடுத்த வேலை செய்ய வேண்டிய அளவிற்கு நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். தொலைபேசி வழி தகவல் ஏமாற்றத்தை உண்டாக்கும்.

செவ்வாய் -
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகி மகிழ்ச்சியை தரும்.

வெள்ளி -
மனதில் தேவையற்ற அச்ச உணர்வு உண்டாகும். முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை.

சனி -
ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகப் பயணம் தொடர்பான சிந்தனை ஏற்படும்.

ஞாயிறு -
ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த பணவரவில் தாமதம் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும்.
*************************

மிருகசீரிடம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். நெருங்கிய உறவினர்களால் சங்கடங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்பு சாதகமாக இருக்கும்.

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். இனி தொழிலில் எந்த விதமான பிரச்சினைகளோ தடைகளோ இருக்காது என்பதை முழுமையாக நம்பலாம்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். திருமணம் உறுதியாகும்.

திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி க்கொள்வது நல்லது.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

செவ்வாய் -
வீண் அலைச்சல்கள் அதிகமாக ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. அவசர முடிவுகள் எடுக்கக்கூடாது. பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்க கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிக்கக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுப விசேஷங்கள் முடிவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களாக ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படும்.

சனி -
வீண் அலைச்சல்கள் அதிகமாக ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாகக் கையாள்வது நல்லது. வீட்டு உபயோகப் பொருட்களில் பழுது ஏற்பட்டு அதனால் செலவு உண்டாகும்.


ஞாயிறு -
நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதால் நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
******************

திருவாதிரை -

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரிடம் கடுமை காட்டாமல் இருப்பது நல்லது தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.

வியாழன் -
முக்கிய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பற்றிய தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

சனி -
கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார நிமித்தமாக பேச்சுவார்த்தைகள் மனநிறைவை ஏற்படுத்தித் தரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x