Published : 22 Nov 2020 02:23 PM
Last Updated : 22 Nov 2020 02:23 PM

அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை) 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.

நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருடன் சண்டை சச்சரவுகளை செய்ய வேண்டாம்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களை குறை சொல்லிப் பேச வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும் தேவையற்ற அவதூறுகள் உங்கள் மீது பரப்பப்படும். கவனமாக இருக்க வேண்டும்.

தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும் நாள். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

செவ்வாய் -
மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடிய நாள். வீட்டிலும் வெளியிலும் சலசலப்புகள் இருக்கும். வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். நிதானமான செயல்பாடு நன்மையைத் தரும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகளும் தீரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

வியாழன் -
அத்தியாவசியச் செலவுகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் கவனக்குறைவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

வெள்ளி -
தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவொரு விஷயத்திலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுபவிசேஷங்கள் முடிவாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

சனி -
தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும். மனம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயகர் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
*******************

பரணி -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

பண வரவு வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும். பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும்.

பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் அதிகமாகவும் ஒரு சில விஷயங்களில் தாமதமும் ஏற்படக்கூடிய நாள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்குச் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான போக்கு இருந்தாலும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்.

வியாழன் -
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடனுஉதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும்.

ஞாயிறு -
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. சிக்கனம் அவசியம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
**********************

கார்த்திகை -

அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.

வீண் விவாதங்கள், வீண் பிரச்சினைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். சகோதர வகை உறவுகளிடம் கவனமாக இருக்கவேண்டும். அவர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியது வரும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

பெண்களுக்கு இயல்பான வாரமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் அகலும். சகோதர சகோதரிகளிடம் வருத்தங்கள் ஏற்படும். ஆனாலும் அமைதி காப்பதன் மூலம் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறிய அளவிலான முயற்சி எடுத்தாலே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

புதன் -
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வியாழன் -
நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் தேவையான பண வரவு கிடைக்கும். சிறிய அளவிலான வியாபார ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x