Published : 17 Nov 2020 11:41 AM
Last Updated : 17 Nov 2020 11:41 AM

உங்களுக்கு ப்ளஸ் மைனஸ் நட்சத்திரங்கள்; பூரம், உத்திரம், அஸ்தம்; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 92  

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரங்கள் பூரம், உத்திரம், ஹஸ்தம். இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் தாரா பலன்களைப் பார்ப்போம்.
இந்தப் பதிவை வாசிப்பதற்கு முன் இந்த தொடரின் 87 வது பதிவை நீங்கள் ஒருமுறை வாசித்து கொள்வது அல்லது தரவிறக்கம் செய்து கொள்வது மிகுந்து உதவிகரமாக இருக்கும்.

பூரம் நட்சத்திரம்
ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம தாரை நட்சத்திரங்களாக வேலை செய்யும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் சுபகாரிய விசேஷங்கள் அனைத்தும் செய்யலாம். ஆனால், ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது. மேலும் இருவருக்கும் பொதுவாக... முடி திருத்துதல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம் போன்றவை அறவே செய்யக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. ஆறு குளம் கடல் போன்றவற்றில் தலை முழுகக் கூடாது. மற்றபடி அனைத்து விசேஷங்களும் செய்யலாம்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களும் முழுமையான வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். சிறு பிசகும் இல்லாத வெற்றியாக இருக்கும். எல்லாவிதமான முயற்சிகளுக்கும் ஏற்றதாக இருக்கும். நண்பர்கள் அமைவதும் மிகச்சிறந்த நற்பலன்களை தரும்.


க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து விஷயங்களும் லாபம் தரக் கூடியதாக இருக்கும். சொத்துகள் சேரும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.


சாதக தாரை நட்சத்திரங்கள் -
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தையும் யோகத்தையும் தருவதாக இருக்கும். வேலைகளுக்கு மனு செய்வது, பதவி உயர்வு, பதவி ஏற்பது, அரசியல் தொடர்பான நகர்வுகளைச் செய்வது, முக்கியமான காரியங்களில் உங்களுக்கு வெற்றியை சாதகமாக்கிக் கொள்வது, வழக்குகளில் வெற்றி பெற இந்த நாட்களில் வழக்கு தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது போன்றவை உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தரக்கூடியதாக இருக்கும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு மைத்திரம் எனும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் அதிகப்படியான லாபத்தை கிடைக்கப்பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது, வியாபார விஷயங்களை மேற்கொள்வது, வியாபார பயணங்கள் மேற்கொள்வது, வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்களில் ஈடுபடுவது என அனைத்தும் உங்களுக்கு அதிகப்படியான... இன்னும் சொல்லப்போனால் இரட்டிப்பு லாபத்தை தரக்கூடியதாக இருக்கும்.

அதிமைத்ர தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் மிக உதவிகரமாகவும், லாபகரமாகவும், மன நிறைவைத் தரக் கூடியதாகவும் இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது, ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வது, அயல்நாடுகளில் நிரந்தரமான குடியுரிமை பெறுவது போன்ற விஷயங்கள் உங்களுக்கு நன்மைகளை... அதிகப்படியான நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -
அஸ்தம், திருவோணம், ரோகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் முழுமையடையாமல் பாதியிலேயே விட வேண்டியதாக இருக்கும். அல்லது நிறைவேறாமல் போகும். இந்த நட்சத்திர நாட்களில், பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. முக்கியமான காரியங்களில் ஈடுபடக்கூடாது. திருமணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு பெண் பார்க்கப் போவது, மாப்பிள்ளை வீடு பார்க்கப் போவது போன்றவை செய்யக்கூடாது. இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமையவே கூடாது. நண்பர்களாக அமைந்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டியது வரும்.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
சுவாதி, சதயம், திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள். பிறருக்கு நன்மை தமக்கு எந்தவிதமான ஆதாயமும் இருக்காது என்று அர்த்தம். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் அடுத்தவர்களுக்கு ஆதாயத்தைத் தருமே தவிர உங்களுக்கு எந்த வகையிலும் ஆதாயம் கிடைக்காது. எனவே இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்களில் உங்களுடன் சேர்ந்தவர்கள் லாபத்தை அனுபவிப்பார்கள். உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது. நண்பர்களாக அமையும் பட்சத்தில் அந்த நண்பர்களுக்காகவே நீங்கள் அனைத்து வேலைகளையும் செய்வதும், செலவுகளை செய்வதுமாக இருக்கும். அவர்களால் எந்தவிதமான உதவிகளும் நன்மைகளும் கிடைக்காது.


வதை தாரை நட்சத்திரங்கள் -
அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு எதிராக திரும்பி உங்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணும். இன்னும் சொல்லப்போனால் கடுமையான பாதிப்புகளையும், மீளமுடியாத துயரத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு பயன் தராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நண்பர்களாக அமையும் பட்சத்தில் கடுமையான சிக்கலில் உங்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பி விடுவார்கள். குறிப்பாக பண விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
************************

உத்திரம் நட்சத்திரம்
உத்திரம் நட்சத்திரத்திற்கான தாராபலம் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

உத்திரம் நட்சத்திரத்திற்கான
ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
அஸ்தம், திருவோணம், ரோகிணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, தொழில் வியாபாரம் தொடங்குவது, வாகனங்கள் வாங்குவது, சொத்துகள் வாங்குவது என எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம்.


க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
சுவாதி, சதயம், திருவாதிரை -

மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்க ஏற்றது. பயணங்கள் மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்கலாம். வியாபார நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளலாம். அனைத்து சுப விசேஷங்களுக்கு மிகவும் ஏற்றது.


சாதக தாரை நட்சத்திரங்கள் -
அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த காரியமும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழில் ஒப்பந்தங்கள் போடுவது, வியாபார ஒப்பந்தங்கள் போடுவது, புதிய கிளைகள் தொடங்குவது, வேலைக்கு ஆட்களை நியமிப்பது அல்லது பணியில் சேர்வது போன்ற அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு நன்மையைச் செய்யும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, வெளிநாடு தொடர்பு உடைய தொழில் தொடங்குவது, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது, லாபகரமான வியாபார விஷயங்கள் பேசி முடிப்பது போன்ற அனைத்தும் உங்களுக்கு நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும்.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்மைகளைத் தரக்கூடிய அதி மைத்ர நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளை தரும். வெளிநாட்டுப் பயணங்கள், வெளியூர் பயணங்கள், ஆன்மிகப் பயணங்கள், ஆன்மிகப் பெரியோர்களைச் சந்திப்பது, முக்கிய நபர்களின் சந்திப்பு, வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது போன்ற விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்கு கடும் துயரத்தைத் தருவதாக இருக்கும். பயணங்கள் செய்யக்கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. பணம் கொடுக்கல்வாங்கல் போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய நாட்களாகும்.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை என்னும் பிறருக்கு மட்டுமே நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இதில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு எந்த விதத்திலும் ஆதாயத்தை தராது. மற்றவர்களுக்கு மட்டுமே ஆதாயத்தை பெற்றுத் தரும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

மூன்று நட்சத்திரங்களும் வதை என்னும் மன நிம்மதியைக் குலைக்கக் கூடிய வதை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் கடும் துன்பத்தை தருவதாக இருக்கும். மனநிம்மதியைக் குறைக்கும், கடன் வாங்கவே கூடாது, கடனை அடைக்க முடியாமல் தீராத துயரத்தைத் தரும். பயணங்கள் செய்யக்கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.
******************************

அஸ்தம் நட்சத்திரம்
அஸ்தம் நட்சத்திரத்திற்க்கான தாராபலம் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
அஸ்தம், திருவோணம், ரோகிணி -

மூன்று நட்சத்திரங்களும் ஜென்ம தாரை நட்சத்திரங்களாகும்.


சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்கள். எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த விஷயமும் முழுமையான வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். தெரியாத விஷயங்களில் ஈடுபட்டால் கூட முழுமையான வெற்றியைக் காண முடியும்.


க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேமம் என்னும் பரிபூரண நன்மைகளைத் தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வீடு - நிலம் வாங்குவது, ஆடை ஆபரணங்கள் வாங்குவது, அல்லது நிலம் விற்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.


சாதக தாரை நட்சத்திரங்கள் -
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும், உங்களுடைய அனைத்துக் காரியங்களையும் சாதகமாக மாற்றி தரக்கூடிய சாதக தாரை நட்சத்திரங்களாகும்.இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகப்படியான சாதகம் என்னும் நன்மையைத் தரக் கூடியதாகும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு நன்மைகளை தரக் கூடிய நட்சத்திரங்கள். அனைத்தும் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு மிகுந்த உபயோகமாகவும், நன்மையைத் தரக் கூடியதாகவும் இருக்கும்.


அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
உத்திரம், உத்திராடம், கார்த்திகை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ரம் என்னும் அதிகப்படியான நன்மைகளை தரக்கூடிய நட்சத்திரங்களாகும். நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் எதிர்பார்த்ததை விட இருமடங்கு ஆதாயம் தரக்கூடியதாகவும், அதிகப்படியான நன்மைகளை வழங்கக் கூடியதாகவும் இருக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -
சுவாதி, சதயம், திருவாதிரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் கடுமையான பாதிப்புகளையும் துயரங்களையும் தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளை தொடங்கக்கூடாது, பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. எந்த ஒரு விஷயங்களும் செய்யக்கூடாது.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
அனுஷம், உத்திரட்டாதி, பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு எந்த வகையிலும் நன்மை தராத, ஆனால் உங்களால் மற்றவர்களுக்கு மட்டுமே ஆதாயம் தரக்கூடிய நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு ஒரு வகையிலும் பயன்படாது, மற்றவர்களுக்கு மட்டுமே ஆதாயத்தை பெற்றுத்தரும். உங்களுக்கு புண்ணியம் மட்டுமே சேரும்.


வதை தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் கடுமையான பாதிப்புகளையும், தீராத துயரங்களையும், மன உளைச்சலையும் தரக்கூடிய வதை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு எதிராக திரும்பி தீராத மன உளைச்சலைத் தரும். கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். கடன் வாங்கக்கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது, ஜாமீன் நிற்கக்கூடாது, புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.


அன்பார்ந்த வாசகர்களே, அடுத்த பதிவில் சித்திரை, சுவாதி, விசாகம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் தாரா பலன் தரக்கூடிய நட்சத்திரங்கள் பற்றிய பட்டியலைப் பார்ப்போம். அடுத்த பதிவில் சந்திப்போம்.

-- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x