Published : 12 Nov 2020 11:24 AM
Last Updated : 12 Nov 2020 11:24 AM

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; நவம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் ஆக்கபூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.

தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன்களப் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் எதிலும் எப்போதும் கவனம் தேவை.

நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுப்பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.
பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரம் உயரும். மாணவர்களுக்கு: செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவியை பூஜித்து வாருங்கள். அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
******************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.

எல்லா விதத்திலும் நன்மையைத் தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்.

எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.

பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும்.

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.

பெண்கள் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்குப் பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
********************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும்.

மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.

பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

கணவர் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.
குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

பெண்களுக்கு கருத்துவேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்துவேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.

கலைத்துறையினருக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனக்குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x