Published : 29 Oct 2020 12:48 PM
Last Updated : 29 Oct 2020 12:48 PM

நவம்பர் மாத பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே!  பாராட்டு கிடைக்கும்; குடும்பத்தில் ஒற்றுமை; எதிலும் லாபம்; பண வரவு உண்டு! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணம் உடைய ரிஷப ராசியினரே!

இந்தக் காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் தைரியமாக எதையும் செய்வீர்கள். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.

தொழில் ஸ்தானாதிபதி சனியின் சாரத்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பது நல்ல அம்சம். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுர்யமான செயல்களால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் தயக்கமோ பயமோ இல்லாமல் ஈடுபட்டுச் சிறப்பாகச் செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எல்லாக் காரியங்களிலும் அதிக கவனத்துடன் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும்.

அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் கல்வியில் தடங்கலின்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைச் செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

ரோகிணி:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள், கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். பணத் தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x