Published : 29 Oct 2020 12:25 PM
Last Updated : 29 Oct 2020 12:25 PM

நவம்பர் மாத பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே! புதிய பொறுப்பு;பணம் வரும்;திடீர் செலவு; மகிழ்ச்சி உண்டு! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

புத்தி சாதுர்யத்தால் புகழையும் செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே.

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எண்ணிய காரியங்களைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் பலத்தால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகளுக்கு அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டி இருக்கும். சொத்துகள் மீது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சிற்றின்பச் செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தினரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களைக் கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக் குழப்பம் நீங்கும். தீவிர உழைப்புடனும், அதிக முயற்சிகளுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

அரசியல்துறையினருக்கு மனக்கவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்தக் காரியத்தையும் யோசித்துச் செய்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அஸ்வினி:

இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துகளுக்கு மாற்று கருத்துகள் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை விநோதங்களைக் கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொலைதூரத் தகவல்கள் மன மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும்.

பரணி:
இந்த மாதம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாகச் சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் சாதகமாக இருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகப் பெருமானை கந்தசஷ்டி பாராயணம் செய்து வழிபடுங்கள். எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலைத் தவிர்க்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x